தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் கடந்த 19ஆம் தேதி, நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஜய் பல கருத்துகளை தெரிவித்து இருந்தார். முக்கியமாக பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ விஷயத்தில் யாரை தண்டிக்க வேண்டுமோ அவர்களை தண்டிக்க வில்லை எனவும், யாரை எங்கு உட்கார வைக்க வேண்டுமோ அங்கு அவர்களை உட்கார வையுங்கள் எனவும் பல கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இது ஆளும் கட்சியினர் மத்தியில் விமர்சனங்களை உண்டாக்கியது.
தற்போது தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகத்திற்கு உயர் கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில் கல்வி நிறுவனங்களில் ஒரு அரசியல் சினிமா சார்ந்த நிகழ்ச்சி நடத்த எப்படி அனுமதி கொடுக்கலாம் என கேட்கப்பட்டிருந்தது.
இதற்கு கல்லூரி தரப்பில் இருந்து, விழா நடைபெற்ற அந்த ஆடிட்டோரியம் கல்லூரி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இல்லை. ஏற்கனவே அங்கு பல நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. எனவும் கல்ல்லூரி நிர்வாகம் தரப்பில் குறிப்பிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…
திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…
சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…
டெல்லி : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி, வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 மீதான முன்னோடியில்லாத 17 மணி…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : சென்னையில் TVH கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.சி.நகர்,…