#BIGBREAKING: பாலியல் வன்கொடுமை – குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கி உத்தரவு.!

புதுக்கோட்டையில் மனநிலை பாதிக்கப்பட்ட சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனுர் அருகே பாலியல் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு 17 வயது மனநலக்குன்றிய சிறுவனை காட்டுக்குள் அழைத்து சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்த வழக்கில் வடமாநிலத்தை சேர்ந்த டேனிஷ் படேலுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தை சேர்ந்த டேனிஷ் படேல் என்பவருக்கு 3 பிரிவுகளின் கீழ் மரண தண்டனையும், ஒரு ஆயுள் தண்டனையும் விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்துக்கு ரூ.6 லட்சம் நிவாரணம் வழங்க நீதிபதி சத்யா உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.