தமிழ்நாடு காவல்துறையால் தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது.
ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது குற்றசாட்டு வைக்கப்பட்டது. இந்த நிலையில் ரூ.3 கோடி பணமோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கர்நாடக மாநிலத்தில் காவல்துறை கைது செய்துள்ளது.
கர்நாடகாவின் ஹசனில் தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜியை தமிழக காவல்துறை கைது செய்துள்ளது. ஆவினில் வேலை வாங்கித் தருவதாக பணமோசடி செய்த புகாரில் முன்ஜாமீன் கோரியை மனுவை சென்னை உயர்நீதிமன்றம் டிசம்பர் 17-ஆம் தேதி தள்ளுபடி செய்ததால் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருந்தார்.
இதன்பின் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பல்வேறு பகுதிகளில் தனிப்படை காவல்துறையினர் தேடி வந்தனர். சுமார் 20 நாட்களாக 8 தனிப்படை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், இன்று ராஜேந்திர பாலாஜி காவல்துறையிடம் சிக்கியுள்ளார். காரில் சென்றுகொண்டிருந்த ராஜேந்திர பாலாஜியை தனிப்படை காவல்துறையினர் மடக்கி பிடித்ததாக கூறப்படுகிறது.
கர்நாடகாவில் பி.எம். சாலையில் சென்றபோது காவல்துறை சுற்றுவளைத்து கைது செய்யப்பட்டுள்ளது. ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் நாளை மறுநாள் விசாரணைக்கு வர இருந்த நிலையில், கர்நாடகாவின் ஹசன் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டுள்ள ராஜேந்திர பாலாஜியை தமிழகம் அழைத்து வந்து விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், அதிமுக முன்னாள் பால்வளத்துறையின் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் உதவியாளர்கள் மூவர் மீது 5 பிரிவுகளின் கீழ் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவையில் பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் மகாதேவ் குறித்து உரையாற்றினார்.…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (ஜூலை 30, 2025) சென்னை பனையூரில்…
திருச்சி : அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, இன்று திருச்சியில் நடந்த ‘மக்களை காப்போம், தமிழகத்தை…
மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் (ஜூலை 27, 2025) கடைசி நாளில், இங்கிலாந்து அணியின் கேப்டன்…
சென்னை : தமிழகத்தில் உள்ள எல்பிஜி கேஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உள்ளிட்ட எண்ணெய்…
பத்தனம்திட்டா : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (ஜூலை 29, 2025) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தமிழகத்தில்…