#BIGBREAKING: உயிரிழந்த 4 மீனவர்களின் உடல்கள் ஒப்படைப்பு.!
இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்த 4 தமிழக மீனவர்களின் உடல்கள் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த 18-ஆம் தேதி கடலுக்கு சென்ற ராமேஸ்வரத்தை சேர்ந்த 4 மீனவர்களின் உடல் சடலமாக மீட்டது இலங்கை கடைப்படை. இலங்கை கடற்படை கப்பல் மோதியல் 4 மீனவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை கடற்படையால் தான் மீனவர்கள் உயிரிழந்துள்ளார்கள் என்று அவர்கள் கோரிக்கையாக இருந்து வருகிறது.
ஆகவே, உயிரிழந்த 4 மீனவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை இந்தியாவில் தான் நடக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். ஆனால், உயிரிழந்த 4 மீனவர்களின் உடல்கள் இலங்கையில் பிரேத பரிசோதனை செய்யப்படும் என கூறப்பட்டது. யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் 4 தமிழக மீனவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்படும் என தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் நேற்று இரவு காங்கேசன் துறை கடற்படை முகாமில் 4 மீனவர்களின் உடல் ஒப்படைக்கப்படும் என்றும் நாளை தமிழகம் கொண்டுவரப்படும் என தெரிவித்திருந்த நிலையில், உயிரிழந்த 4 தமிழக மீனவர்களின் உடல்கள் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. இலங்கை கடலோர காவல்படையினர் நடுக்கடலில் 4 பேரின் உடல்களை இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைத்தனர்.