தமிழகத்தில் உள்ள கூட்டுறவு அங்காடிகளில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.33க்கு விற்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
வெங்காயம் உற்பத்தி மிகவும் குறைந்து உள்ளது.இதனால் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது.
இது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், வெங்காய விலையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.செயற்கையான விலையேற்றம் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெளிமாநிலங்களில் இருந்தும் வெங்காயம் வாங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த வெங்காயம் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும். இன்றிலிருந்து ரேசன் கடைகளிலும் வெங்காயம் விற்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆந்திராவில் இருந்து ரூ.30-க்கு வெங்காயம் வாங்கப்பட்டு, கூட்டுறவு விற்பனை அங்காடிகள் மூலம் ரூ.33-க்கு விற்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…
சென்னை : தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டங்கள் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கின்றன.…
சென்னை : தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 7ம் தேதி சென்னை கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என…
லேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி,…