BigBreaking:முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு 5 ஆண்டு சிறை – நீதிமன்றம் தீர்ப்பு…!
முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 1991-96 வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில்,முன்னாள் சமூக நலத்துறை அமைச்சர் இந்திர குமாரியின் கணவர் பாபு மாற்றுத்திறனாளிகளை வழிநடத்துவதாகக் கூறி அரசிடம் இருந்து ரூ.15.45 லட்சம் முறைகேடாக பெற்றதாக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது இந்த வழக்கில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் இந்திரா குமாரி உள்ளிட்ட 3 பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனையடுத்து,3 பேரின் தண்டனை விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.
இந்நிலையில்,ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதேபோல,அவரது கணவர் பாபுவுக்கு 5 ஆண்டு சிறை மற்றும் ஐ.ஏ.எஸ்.அதிகாரி சண்முகத்திற்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திர குமாரி தற்போது திமுகவில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.