#Big Alert ! இன்று மாலை சென்னையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்
வங்கக்கடலில் நகர்ந்து வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாலை சென்னையை கடக்கிறது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை சென்னை அருகே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 170 கி.மீ தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கே 170 கி.மீ. தொடர்ந்து மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை சென்னையைச் சுற்றி வட தமிழ்நாடு மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Depression over southwest Bay of Bengal about 170 km east-southeast of Chennai and 170 km east of Puducherry. Continue to move west-northwestwards and cross north Tamil Nadu & adjoining south Andhra Pradesh coasts around Chennai by the evening of 11th November 2021. pic.twitter.com/9fqM88YxdN
— India Meteorological Department (@Indiametdept) November 11, 2021