இன்றைய பட்ஜெட்டில் மாபெரும் 7 தமிழ்க்கனவு – தமிழ்நாடு அரசு

Published by
பாலா கலியமூர்த்தி

கடந்த 12-ஆம் தேதி இந்த ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டம் தொடங்கிய நிலையில், இன்று தமிழக அரசின் 2024- 2025 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், தமிழக அரசின் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

அதன்படி, இன்று காலை 10 மணிக்கு தமிழக அரசின் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னராசு முதல் முறையாக தாக்கல் செய்கிறார். இதன்பின் நாளை வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யவுள்ளார். நாளை மறுநாள் 2023-24 ஆண்டுக்கான முன்பண செலவு மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.

இன்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல்..!

பட்ஜெட் தாக்கலை முன்னிட்டு நேற்று பட்ஜெட் இலச்சினை (முத்திரை சின்னம்) வெளியிடப்பட்டது. அதில்  “தடைகளைத் தாண்டி… வளர்ச்சியை நோக்கி” என்ற வாசகம் இடம்பெற்றது.  அதுமட்டுமில்லாமல், மாபெரும் 7 தமிழ்க் கனவு என்ற பெயரில் தமிழக அரசின் பட்ஜெட்டில் 7 முக்கிய அம்சங்கள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.

அதாவது, இன்று பட்ஜெட்டில் இடம்பெறப்போகும் 7 முக்கிய அம்சங்கள் குறித்து தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, சமூகநீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழ்நாடு, அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமை வழி பயணம், தாய் தமிழும் தமிழர் பண்பாடும் ஆகியவை இன்று தாக்கலாகும் பட்ஜெட்டில் இடம்பெறும் அம்சங்களாகும். இதானால் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள்  வாய்ப்புள்ளதால் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.

Recent Posts

அவுட்டா..? நாட்-அவுட்டா? சர்ச்சையை கிளப்பிய கே.எல். ராகுல் விக்கெட்! நடந்தது என்ன?

பெர்த் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில்…

43 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்- முத்துவிடம் உண்மையை உளறிய பார்வதி..!

சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில்  இன்றைக்கான[நவம்பர் 22] எபிசோடில் விஜயா செய்த காரியத்தை அண்ணாமலையிடம் கூறும் முத்து.. அண்ணாமலை எடுத்த…

49 mins ago

28 மின்சார ரயில்கள் ரத்து.. கூடுதல் பேருந்துகளை அறிவித்த போக்குவரத்துக் கழகம்!

சென்னை : சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை செல்லும் 28 மின்சார ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று(22.11.2024)…

1 hour ago

எஸ்பி வேலுமணி சொல்லியும் மோதலில் ஈடுபட்ட நிர்வாகிகள்! தள்ளுமுள்ளான அதிமுக கள ஆய்வு கூட்டம்!

திருநெல்வேலி : மாவட்டத்தில் இன்று அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் இந்த ஆய்வு…

1 hour ago

சங்கினா ‘நண்பன்’… ரஜினியுடன் இதை தான் பேசினேன்! சீமான் பேச்சு!

சென்னை : தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வரும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த்…

1 hour ago

நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு… போலீசில் பரபரப்பு புகார்! திருடனுக்கு வலைவீச்சு!

சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…

2 hours ago