ஆயிரக்கணக்கான தொண்டர்கள் புடைசூழ நடைபெற்ற பூமி பூஜை.! தவெக மாநாடு பணி தீவிரம்.!
தவெக முதல் மாநில மாநாட்டிற்கான பந்தக்கால் நடும் விழா மற்றும் பூமி பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழுப்புரம் : விக்கிரவாண்டியில் தவெக மாநாடு நடைபெற உள்ள இடத்தில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் பூமி பூஜை விமரிசையாக செய்யப்பட்டது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில், மாநாட்டுக்கான பந்தக்கால் கோலாகலமாகஆயிரக்கணக்கான தொண்டர்கள் புடைசூ நடப்பட்டது.
அருணாச்சலேஸ்வரர் சுவாமி படம், தேவாலயம், மசூதி, கோயில்களில் சிறப்பு பூஜை செய்யப்பட்ட புனித நீர் என மும்மதங்கள் சாஸ்திரப்படியும், வேத மந்திரங்கள் முழங்க சூலத்துடன் தவெக மாநாடு பந்தல் கால் ஊன்றப்பட்டது.
அக்டோபர் 27ஆம் தேதி மாநாடு நடைபெற உள்ள நிலையில், இன்று முதல் மாநாடு பணிகள் விறுவிறுப்பு அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026 தேர்தலை இலக்காக வைத்து TVK தனது முதல் மாநாட்டை நடத்தவுள்ளது.
முன்னதாக, இன்று நடைபெற்ற த.வெ.க மாநாட்டிற்கான பந்தக்கால் நடும் விழாவில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கவில்லை என்றும், விஜய் பங்கேற்கிறார் என வெளியாகும் செய்தி தவறானது என த.வெ.க தலைமை கூறியது குறிப்பிடத்தக்கது.
Vijay மாநாடு இடம் பந்தக்கால் நடுதல் பூமி பூஜை @actorvijay @tvkvijayhq pic.twitter.com/BtTYapdaCS
— Nikil Murukan (@onlynikil) October 4, 2024