குலசை ராக்கெட் ஏவுதளத்திற்கு பூமி பூஜை! ஜெட் வேகத்தில் வேலையை தொடங்கிய இஸ்ரோ…
இஸ்ரோ தற்போது குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தில் பூமி பூஜையுடன் பணிகளை துவங்கியுள்ள நிலையில், அடுத்தாண்டு முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தூத்துக்குடி மாவட்டத்தின் குலசேகரப்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்ககும் பணியில் மும்மரமாக ஈடுபட்டு கொண்டிருக்கிறது. இந்த ஏவுதளத்தின் பணிகள் இரண்டாண்டுகளில் முடிவடையும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில், இதற்கான வேலைகள் குலசேகரப்பட்டினம் கடற்கரை பகுதி, கிழக்கு கடற்கரை அருகில் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த இடம் தான் ராக்கெட் ஏவுதளத்திற்கான சிறந்த இடம் என்பதால், இந்தப் பகுதியில் ஏவுதளம் அமைக்க தமிழக அரசு சுமார் 2,300 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி இஸ்ரோவுக்கு ஒப்படைத்தது.
இதனையடுத்து, இன்று ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிக்கு பூமிபூஜை இன்று போடப்பட்டது. பூமிபூஜையில் இஸ்ரோ தலைவர் வி.நாராயணன், இஸ்ரோ அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள். இந்த ஆண்டு பூமிபூஜையுடன் தொடங்கி இருக்கும் நிலையில், இதற்கான பணிகள் அடுத்த ஆண்டுக்குள் முழுமையாக நிறைவடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், குலசேகரப்பட்டினத்தில் அமைக்கப்படும் இஸ்ரோவின் புதிய ராக்கெட் ஏவுதளம், சிறிய ரக ராக்கெட்டுகளான SSLV (Small Satellite Launch Vehicle) போன்றவற்றை ஏவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதைப்போல, குலசேகரப்பட்டினத்தில் இருந்து ஏவப்படும் ராக்கெட்டுகள், இலங்கை போன்ற நாடுகளின் நிலப்பரப்பை கடக்காமல், நேரடியாக தெற்கு திசையில் இந்தியப் பெருங்கடல் வழியாக செல்ல முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
விஜய் தம்பி ஜி இப்படி பேசாதீங்க! தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி!
March 31, 2025