பீகார் கடைவீதியில் துப்பாக்கி சூடு.! ஒருவர் பலி.! பொதுமக்கள் சிதறி ஓட்டம்.!
பீகார் மாநிலம் பெகுசராய் நகரில் உள்ள மாலிப்பூர் சௌக் எனும் பகுதியில் உள்ள கடை தெருவில் நேற்று (புதன்கிழமை) மாலை திடீரென துப்பாக்கி சூடு நடைபெற்றது.
நேற்று மாலிப்பூர் சௌக் பகுதி கடைவீதியில் இரண்டு பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் திடீரனெ தாங்கள் கொண்டுவந்த துப்பாக்கிகளால் மக்களை நோக்கி சுட ஆரம்பித்தனர். இதில் மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
அப்போது சந்தன் குமார் எனும் 30வது நபர் உயிரிழந்தார். இதில் இடிபாடுகளில் சிக்கி 11 பேர் காயமுற்றனர். தாக்குதல் நடத்திய அந்த மர்ம நபர்கள் அடுத்தடுத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தினர்.
இது குறித்தும், தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். சிறிய காயமுற்றவர்கள் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரிய காயங்கள் அடைந்தவர்கள் பாட்னாவிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.