"100 அடியை தொட்ட பவானி சாகர்"அணை…!!
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இந்த ஆண்டில் 2ஆவது முறையாக 100 அடியை எட்டியுள்ளது.கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது குறிப்பிடத்தக்கது.
பவானிசாகர் அணை ஈரோடு மிக மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்குகின்றது. இந்த அணையினால் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 2 இலட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெற்று வருகின்றன.
அணையின் நீர்மட்டம் பாசனத்திற்கு திறக்கப்பட்ட நிலையில் குறையத் தொடங்கியது. இந்நிலையில் கடந்த ஒரு வாரகாலமாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
மழை பெய்வதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 5 ஆயிரத்து 490 கனஅடியாக இருந்தது. ணையின் நீர்மட்டம் 100.21 அடியாகவும், நீர் இருப்பு 28.8 டிஎம்சி ஆகவும் உள்ளது.கீழ்பவானி வாய்க்காலில் விநாடிக்கு 2 ஆயிரத்து 300 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
பாசனப்பகுதிகளில் மழை பெய்து வருவதால் பவானி ஆற்றில் நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU