29,667 கன அடியாக அதிகரித்த பவானிசாகர்..!
120 அடி உயரம் கொண்ட பவானிசாகர் அணையில் 105 அடிக்கு தண்ணீர் சேமித்து வைக்க முடியும். மேலும் நீலகிரி மலைப்பகுதியே பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாகும். இந்நிலையில் அங்கு மழை பொழியும் போதெல்லாம் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கும்.
நீலகிரி மலை பகுதியில் 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி பவானிசாகர் அணையில் வினாடிக்கு கிட்டத்தட்ட 1,072 கனஅடி தண்ணீர் வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 85.75 அடியாக உயர்ந்தது, அணையில் இருந்து 300 கனஅடி தண்ணீர் காலிங்கராயன் வாய்க்காலில் வினாடிக்கு திறந்து விடப்பட்டது.
மேலும் அணையில் 105 அடி கொண்ட அணை நீர்மட்டம் நீர்வரத்து அதிகரிப்பால் தினமும் 2 அடி உயர்ந்து 91.75 அடியாக உள்ளது. இந்நிலையில் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 24,112 கன அடியில் இருந்து 29,667 கனஅடியாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.