தமிழகத்தில் பாரத் நெட் திட்டம் – ஆலோசகர்களை தேர்ந்தெடுக்கும் பணி தொடக்கம்!
தமிழகத்தில் பாரத் நெட் திட்டத்தை செயல்படுத்த ஆலோசகர்களை தேர்ந்தெடுக்கும் பணி தொடக்கம்.
நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் இணைய வசதியை ஏற்படுத்த பாரத் நெட் திட்டத்தை மத்திய அரசு செயற்படுத்தி வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் உள்ள 12,525 கிராமங்களில் ஏற்படுத்தப்பட உள்ள நிலையில், இதற்கான ஒப்பந்தம் தமிழக அரசு மற்றும் திட்ட ஒருங்கிணைப்பு நிறுவனங்களுடன் கையெழுத்தானது.
இந்த நிலையில், ரூ.1230 கோடி மதிப்பில் தமிழகத்தில் உள்ள 12,525 கிராமங்களிலும் இணையவசதி ஏற்படுத்தி தரும் பாரத் நெட் திட்டம் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்துவதற்காக அனைத்து மாவட்டங்களில் ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைத்த நிலையில் ஆலோசகர்களை நியமிக்க டெண்டர் அறிவிக்கப்ட்டுள்ளது.
தமிழகத்தில் பாரத் நெட் திட்டம் – ஆலோசகர்களை தேர்ந்தெடுக்கும் பணி தொடக்கம்!#tngovt pic.twitter.com/oBWcUZmHjd
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) December 30, 2021