#BharatJodoYatra: ராகுல் யாத்திரையில் பங்கேற்றார் கமல்ஹாசன்!
ராகுல் காந்தி நடத்தி வரும் “பாரத் ஜோடோ” யாத்திரையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்பு.
டெல்லியில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நடத்தி வரும் “பாரத் ஜோடோ” என்ற இந்திய ஒற்றுமை யாத்திரையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றார். டெல்லியில் காங்கிரஸ் கட்சியினருடன் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த சமயத்தில், டெல்லியில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் அரசியல்வாதியாக இல்லாமல், ஒரு இந்தியனாக பங்கேற்கவுள்ளேன் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். அந்தவகையில், தற்போது ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தில் கமல்ஹாசன் பங்கேற்றுள்ளார்.