பாரதியார்,வ.உ.சி. பெயரில் ஆய்வு இருக்கை – உயர்கல்வித்துறை உத்தரவு.
பாரதியார் பெயரிலும்,வ.உ.சி. பெயரிலும் ஆய்வு இருக்கைகள் அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க உயர்கல்வித்துறை உத்தரவு.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரிலும்,மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் வ.உ.சி. பெயரிலும் ஆய்வு இருக்கைகள் அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.சிண்டிகேட்டின் ஒப்புதலைப் பெற்று பதிவாளர்கள் பணிகளை தொடங்க உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும்,திருவள்ளுவர்,பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காகிதமில்லா செமஸ்டர் தேர்வுகளை நடத்தவும் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.அதன்படி,வரும் செமஸ்டர் தேர்வுகளிலேயே 20% தேர்வை காகிதமில்லா முறையில் நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதே சமயம்,தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்திலும் சோதனை முறையில் காகிதமில்லா செமஸ்டர் தேர்வுகளை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும்,வேளாண் பல்கலைக்கழகத்தில் காதிமில்லா செமஸ்டர் தேர்வு முறை ஏற்கனவே நடைமுறையில் இருந்து வரும் நிலையில் அதனை விரிவாக்கவும் உயர்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.