பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் கர்நாடகா மற்றும் தெலுங்கானா , தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்குச் செல்கிறார். கர்நாடகாவில் மே 10-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தெலுங்கானாவில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்கிடையில், வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகை தரும் பிரதமர் மோடி பல்வேறு திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். அதன்படி, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சென்னை-கோவை வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்கிறார். மயிலாப்பூர் விவேகானந்தர் மண்டபத்தில் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து உரையாற்றுகிறார்.
அதன்பிறகு, பல்லாவரம் பகுதியில் பொதுமக்களை சந்திக்கிறார். பிறகு ஏப்ரல் 9 ஆம் தேதி கர்நாடகாவிற்கு செல்கிறார். கர்நாடகா சுற்றுப்பயணத்தின் போது, மோடி பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்கும், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமுக்கும் செல்கிறார்.
‘புலிகளின் 50 ஆண்டுகளின் நினைவேந்தல்’ திட்டத்தைத் தொடங்கி வைப்பதோடு, புலிகள் சரணாலயம், யானைகள் முகாமை பார்வையிடுகிறார். முதுமலை ஆஸ்கர் தம்பதிகளை சந்தித்து கலந்துரையாட உள்ளார்.
சென்னை : 2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகிறது. இன்று 5-ஆம்…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. பெரியார் குறித்து…
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற நிலையில், வரும் ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, எந்த…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. சமீபத்தில் கடலூர்…