Bharat: தேர்தலில் இந்தியா என்ற சொல்லே பாஜகவை விரட்டும்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Tamilnadu CM MK Stalin

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (NDA) எதிராக சுமார் 20க்கும் மேற்ப்பட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து I.N.D.I.A என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளனர். நாட்டின் பெயரை வைத்ததற்கு பாஜகவினர் உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதுமட்டுமில்லாமல், இந்தியா என்ற நாட்டின் பெயரை ‘பாரத்’ என மாற்ற வேண்டும் எனவும் பாஜகவினர் குரல் கொடுத்து வந்தனர்.

இந்த சமயத்தில், 20 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள ஜி20 கூட்டமைப்பானது இந்த வருடம் இந்தியா தலைமையின் கீழ் ஆலோசனை கூட்டங்களை மேற்கொள்கிறது. இதன் உச்சி மாநாடு அடுத்த வாரம் தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழ் குடியரசு தலைவர் உள்ளிட்ட தலைவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த அழைப்பிதழில், இந்திய குடியரசு தலைவர் என்பதற்கு பதில், பாரத் குடியரசு தலைவர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரின்போது இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என மாற்றம் செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற மத்திய பாஜக அரசு திட்டமிட்டு இருக்கும் இருக்கும் நிலையில், இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பெயர் மாற்றம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு INDIA என்று பெயர் சூட்டியதில் இருந்து பா.ஜ.க.வுக்கு இந்தியா என்ற சொல்லே கசந்து வருகிறது. இந்தியாவை வளர்ச்சிமிகு இந்தியாவாக மாற்றப் போகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் 9 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா என்ற பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்திருக்கிறது. அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை மிரட்டுகிறது. தேர்தலில் இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை விரட்டும் என்றுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்