பாரத ரத்னா பிரணாப் முகர்ஜி.! சாதுரியமிக்க அனுபவம் சக்கரவர்த்தி – முக ஸ்டாலின் இரங்கல்.!
பாரத ரத்னா பிரணாப் முகர்ஜி மறைவெய்திய செய்தி துயரச் செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளானேன் என்று முக ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக முன்னாள் இந்திய குடியரசுத் தலைவரும், மூத்த அரசியல் தலைவருமான பிரணாப் முகர்ஜி உடல் நலக்குறைவால் புது டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார் என்று அவரது மகன் அபிஜித் முகர்ஜி உறுதிப்படுத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரணாப் முகர்ஜி மறைவிற்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், தமிழக திமுக தலைவர் முக ஸ்டாலின், பிரணாப் முகர்ஜி மறைவிற்கு தனது இரங்கலை தெரிவித்து, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், பாரத ரத்னா பிரணாப் முகர்ஜி மறைவெய்திய செய்தி துயரச் செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளானேன். மேற்கு வங்கத்தில் குக் கிராமத்தில் உள்ள மண் வீட்டிலிருந்து ஜனாதிபதி மாளிகை என்ற சிகரத்தை திறமையாலும் உழைப்பாலும் எட்டியவர். எத்தகைய சிக்கல்களையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துவைக்கும் திறமையும் அசாத்திய துணிச்சலும் கொண்ட முதுபெரும் தலைவர். அவர், நிதியமைச்சராக இருந்தபோது கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி காலாவதி ஆன நிலையிலும் எனது வேண்டுகோளை ஏற்று நிதி ஒதுக்கி சென்னையின் குடிநீர் தேவையை தீர்க்க ஒத்துழைத்தனர்
தனது ஆரம்ப கால நண்பரான பிரணாப் முகர்ஜியை குடியரசுத் தலைவராக்க முத்தமிழ் அறிஞர் கலைஞர் முன்னணியில் நின்று ஆதரித்தார். என் 50 ஆண்டு கால நண்பர் கலைஞர், நவீன இந்தியாவை உருவாக்கிய முக்கிய தலைவர் என்றும் இந்தியா மற்றும் தமிழ் நாட்டின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டவர் என்று கலைஞரின் இரண்டாவது நினைவு நாளில் பிரணாப் முகர்ஜி ஆற்றிய உரை எப்போதும் நினைவில் நிற்கும். அவர் குடும்பத்தாருக்கும், காங்கிரஸ் பேரியக்கத்திற்கும், மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The demise of our former President Bharat Ratna Thiru #PranabMukherjee is an unimaginable loss to our nation.
An astute statesman and an unflinching guardian of secularism and democracy, his legacy will live on through our fight to keep these principles alive. pic.twitter.com/8Tve75XVcW
— M.K.Stalin (@mkstalin) August 31, 2020