எஸ்.பி.பிக்கு பாரதராத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்தும்படி முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை பிரபலமான பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் உடல்நலக்குறைவால் இறைவனடி சேர்ந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து இவருக்கு சிலை அமைக்க வேண்டும், இசை பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும், விருதுகள் வழங்க வேண்டும் என பலரும் முதல்வரிடம் கோரிக்கை எழுப்பிய வண்ணம் உள்ளனர். அதுபோல ஆந்திராவிலும் இவருக்கு இசை பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் எனவும், பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் எனவும் ஜெகன்மோகன் ரெட்டி அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர் எனவே தமிழக அரசு சார்பாக அவருக்கு காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் நடைபெற்றது. அதுபோல எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தும்படி முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் முதல்வர் இது குறித்து விரைவில் முடிவு எடுத்து அறிவிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…