ஒற்றுமை யாத்திரை : நீட் தேர்வால் உயிரிழந்த அனிதா குடும்பத்தாரை சந்தித்தார் ராகுல் காந்தி.!
ஒற்றுமை யாத்திரையின் 2ஆம் நாள் பயணத்தின் போது நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் சகோதரர், ராகுல் காந்தியை சந்தித்தார்.
காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி பாரத ஒற்றுமை யாத்திரையை நேற்று கன்னியாகுமரியில் தொடங்கினார். இந்த யாத்திரையை தேசிய கொடுத்து தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
இந்த பயணத்தின் மோளம் 3,570 கிமீ தூரம் கடந்து 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக காஷ்மீர் வரை நடைபயணம் செய்வதே இதன் இலக்கு என கூறப்பட்டுள்ளது.
இன்று இரண்டாம் நாள் பயணம் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீவரத்தில் தொடங்கி உள்ளது. இதில் 20 முதல் 30 கிமீ தொலைவு நடப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், வழியெங்கும் ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் ராகுல் காந்தியை பின்தொடர்ந்து நடந்து செல்கின்றனர்.
அந்த யாத்திரை தொடக்க விழாவில், திரளான தொண்டர்கள் கலந்துகொண்டனர். அப்போது, அந்த நடை பயணத்தில், நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் சகோதரர் ராகுல் காந்தியிடம் நீட் தேர்வு விலக்கு தொடர்பான மனுவை கொடுத்தார். பிறகு, ராகுல் காந்தி, அனிதாவின் குடும்பநிலை குறித்து அனிதா சகோதரரிடம் நலம் விசாரித்தார்.