நாளை நாடு முழுவதும் முழு அடைப்புக்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு பல்வேறு காட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது.
வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 12 நாட்களாக விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்திற்கு ஒரு முடிவு இல்லாத நிலையில், நாளை நாடு முழுவதும் முழு அடைப்புக்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், இடதுசாரி முன்னணி தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்த முழு அடைப்பு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு உள்ளாகுமா? எனக் கேள்வி எழுந்துள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் 8 போக்குவரத்து கழகங்கள் சார்பாக 22 ஆயிரம் பேருந்துகள் வளாகமாக இயக்கப்படுகிற நிலையில், தற்போது கொரோனா தொற்று காரணமாக, பள்ளி, கல்லூரிகள் முழுமையாக திறக்கப்படாததால், பேருந்துகளின் சேவை குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், போக்குவரத்து கழக உயர் அதிகாரி, பொது வேலை நிறுத்தம் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் அனைத்து அரசு பேருந்துகளும் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும்ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் இதுகுறித்து கூறுகையில், பொது வேலை நிறுத்தம் காரணமாக நாளை பகலில் ஆம்னி பேருந்துகள் சேவை ரத்து செய்யப்படுவதாகவும், பகல் நேரத்தில் மிகக் குறைந்த அளவில்தான் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் மேலும் மாலை 6 மணிக்குப் பிறகு எல்லா பகுதிகளுக்கும் ஆம்னி பேருந்து சேவை தொடரும் என தெரிவித்துள்ளார்.
இந்த முழு அடைப்பு போராட்டத்தால், ரயில் போக்குவரத்து தடைபடாது என்று ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார். தற்போது பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பல வங்கிகள், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், நாளை வங்கி சேவைகள் பாதிக்கப்படலாம் என்றும், பாரத் பந்தின் போது பால், காய்கறி விநியோகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவசர மற்றும் ஆம்புலன்ஸ் மருத்துவமனை சேவைகள் பாதிக்கப்படாமல் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…