பாக்கியராஜ் பாஜகவில் சேரவில்லை. பாக்கியராஜ் அவர்கள், தன்னுடைய கருத்தை நேரடியாக, நெத்தியடியாக பேசக்கூடிய ஒரு மனிதர் என அண்ணாமலை பேட்டி.
சென்னை கமலாலயத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய இயக்குனர் பாக்கியராஜ், இந்தியாவுக்கு மோடி போன்ற எனர்ஜியான பிரதமர் தான் தேவை. பிரதமர் மோடி பெயர் மக்கள் மனதில் எழுதப்பட்டுள்ளது. அவர் வெளிநாடு செல்வதை சிலர் கிண்டல் செய்கின்றனர். ஆனால் இந்த வயதிலும் இத்தனை நாடுகளுக்கு எப்படி பயணிக்கிறார்? உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறார் என்று வியக்கிறேன். தன் மீதான விமர்சனங்களுக்கு பிரதமர் மோடி செவி சாய்க்காமல் இருக்கிறார். எனவே, பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்து இருந்தார்.
இதற்கு பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பிரதமர் மோடி குறித்து பாக்கியராஜ் அவர்கள் பேசிய கருத்து குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், பாக்கியராஜ் பாஜகவில் சேரவில்லை. பாக்கியராஜ் அவர்கள், தன்னுடைய கருத்தை நேரடியாக, நெத்தியடியாக பேசக்கூடிய ஒரு மனிதர். பாரத பிரதமரின் மக்கள் நலத்திட்டத்தினுடைய ஒரு புத்தகத்தை வெளியிடுட்டுள்ளார். அதற்காக அவர் பிஜேபி சப்போர்ட் என சொல்வதைவிட, PM மோடி அவர்களின் சப்போர்ட். பிரதமருக்கு எல்லாருமே சப்போர்ட் தானே பண்ண வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…
டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…