சென்னையைச் சேர்ந்த மருதாசலம் என்பவர், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் ஆபாசமாகவும், அவதூறு கருத்துகளை பதிவிட்டுருந்தார். இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டதையடுத்து ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த ஜாமீன் மனு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சமூக வலைதளங்களில் கடுமையாக ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தி, அவதூறாக கருத்து தெரிவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
மேலும், நீதித்துறையைச் சேர்ந்தவர்கள், அரசியல் பதவி வகிப்பவர்கள் குறித்தும், அவர்களது குடும்பத்தினர் குறித்தும் தனிப்பட்ட முறையில் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். இவ்வாறு சமூக வலைதளங்களில் ஆபாசக் கருத்துக்களை வெளியிட்டு பதிவு செய்தவர்களின் பட்டியலை தயார் செய்து அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மருத்தாசலம் தரப்பில் நீதிபதி குறித்து ஆபாச கருத்து பதிவிட்டதற்காக மன்னிப்பு கடிதம் அளித்தால் ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிப்பதாக நீதிபதி தெரிவித்தார். மேலும் காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் காவல்துறை அளித்த அறிக்கையை படித்துப் பார்த்த நீதிபதி, அதில் திருப்தி இல்லை என்று தெரிவித்து. இதுபோல் அவதூறாகவும், ஆபாசமாகவும் கருத்துக்களை பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக எந்த மாதிரியான நடைமுறை பின்பற்றப்படுகிறது என்று கேள்வி எழுப்பிய அவர், தமிழகம் முழுவதும் இதுபோல் கருத்துக்களை பதிவு செய்பவர்களின் பட்டியலை சேகரித்து அறிக்கையாக அளிக்க வேண்டும் என்று ஏடிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு, 29-ம் தேதிக்கு இந்த வழக்கை தள்ளி வைத்தது.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…