கொரோனா தொற்றால் உயிரிழந்த காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் சென்னை அப்போலோ மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தார். அவரின் உடல்நலம் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் இன்று தெரிவித்துள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. ஹச்.வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வசந்தகுமார் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமாரின் மறைவுச் செய்தி கேட்டு வேதனையடைந்தேன் என தெரிவித்த அவர், இன்முகம்- பழகுவதற்கு இனியர், கடின உழைப்பாலும் சலியாத முயற்சியாலும் சாதித்துக் காட்டிய வெற்றியாளர் என தெரிவித்த அவர், காங்கிரஸ் கட்சியினருக்கும், வசந்தகுமாரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த ஆறுதலும் அனுதாபமும் தெரிவித்து கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
ஜார்ஜ் பார்க் : இந்தியா - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டியானது இன்று நடைபெற்றது. இந்த போட்டியில்…
டெல்லி : உடல் நலக்குறைவால் நடிகர் டெல்லி கணேஷ் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்தார். அவரது மறைவு…
பலுசிஸ்தான் : நேற்று காலை 9 மணி அளவில் பலுசிஸ்தானில் அமைந்துள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம்…
சென்னை : புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்று இருந்த "ஓ சொல்றியா மாமா" பாடல் மிகப்பெரிய ஹிட்டாகி படத்தின்…
மும்பை : பொதுவாகவே, சினிமா துறையிலும் சரி, விளையாட்டுத் துறைகளிலும் சரி சில பிரபலங்கள் தங்களுடைய குழந்தைகளின் முகத்தை ஊடகத்திற்கு…
சென்னை : வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும், அந்த தேர்தலில் தேமுதிக கட்சியின் கட்டமைப்பைப் மேம்பபடுத்துவது தொடர்பாக…