சிறந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி – விருதுகளை வழங்கினார் முதல்வர்.!
74-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி கொடியேற்றிய பின்னர் சிறப்பு விருதுகளை வழங்கினார்.
உள்ளாட்சி அமைப்புகளில் சிறந்த மாநகராட்சி விருது வேலூர் மாநகராட்சிக்கு வழங்கப்பட்டது. சிறந்த நகராட்சிகள் முதல் பரிசு விழுப்புரம், இரண்டாம் பரிசு கரூர், மூன்றாம் பரிசு கூத்த நல்லூருக்கு விருது தரப்பட்டது.
சிறந்த பேரூராட்சி முதல் பரிசு சேலம் வனவாசி, இரண்டாம் பரிசு தேனி வீரபாண்டி, மூன்றாம் பரிசு கோவை மதுக்கரைக்கு முதல்வர் பழனிசாமி விருதுகளை வழங்கினார்.
மேலும் மதுரை அருண்குமார், கடலூர் ராம்குமார், சென்னை அம்பேத்கருக்கு மாநில இளைஞர் விருது வழங்கப்பட்டது. பெண்கள் பிரிவில் முதல்வரின் மாநில இளைஞருக்கான விருது கடலூரை சேர்ந்த புவனேஸ்வரிக்கு தரப்பட்டது.