சனாதன வழக்கு..! அமைச்சர் உதயநிதிக்கு நிபந்தனை ஜாமீன்.!
பெங்களூரு: கடந்த வருடம் செப்டம்பர் மாதம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசுகையில், டெங்கு மலேரியா போல சனாதானம் ஒழிக்கப்பட வேண்டும் என பேசியிருந்தார். இதற்கு பல்வேறு இந்துதுவா அமைப்புகள், அரசியல் கட்சியினர் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு வழக்குகள் உதயநிதிக்கு எதிராக பதிவு செய்ப்பட்டது. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் பரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் வேளையில், இன்று (ஜூன் 25) அமைச்சர் உதயநித்தி ஸ்டாலின் நேரில் ஆஜராகினர்.
பெங்களூரு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிய அமைச்சர் உதயநிதிக்கு 1 லட்ச ரூபாய் பிணைத்தொகையுடன் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டு, வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.