உயிர் உரங்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் – வேளாண்மைத்துறை விவசாயிகளுக்கு அறிவுரை
உயிர் உரங்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து வேளாண்மைத்துறை விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. அதன்படி,
- மண்வளம் பாதுகாக்கப்படுகிறது.
- காற்றிலுள்ள நைட்ரஜன் வாயுவை தழைச்சத்தாக மாற்றி பயிர்களுக்கு அளிக்கிறது.
- பயிர் வளர்ச்சி ஊக்கிகளான இண்டோல் அசிட்டிக் அமிலம், ஜிப்ரலின், பயோட்டின் மற்றும் வைட்டமின் பி ஆகியவற்றை நுண்ணுயிர்கள் உற்பத்தி செய்வதால் பயிர்கள் செழித்து வளர்கிறது.
- நோய்களை எதிர்க்கும் சக்தியை மண்ணில் உண்டாக்குகிறது.
- மண்ணில் பயிர்களுக்கு வறட்சி மற்றும் களர் உவர் தன்மைகளை தாங்கி வளரும் திறனை கொடுக்கிறது.
- தழைச்சத்து மற்றும் மணிச்சத்து உரங்களில் 25 சதவீதம் சேமிக்கப்படுகிறது.
- மாசற்ற சுற்றுப்புறச் சூழலை ஊக்குவிக்கின்றது.
- இயற்கை வழி பண்ணையம் ஊக்குவிக்கப்படுகிறது.
- மகசூல் 15 முதல் 20 சதம் வரை அதிகரிக்கிறது.
என தெரிவிக்கப்பட்டுள்ளது.