கீழடி ஆய்வறிக்கை : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் பாண்டியராஜனுக்கு பாராட்டு

Default Image

கீழடி ஆய்வறிக்கையை வெளியிட்ட தொல்லியல்துறை அமைச்சர் பாண்டியராஜன், துறை முதன்மைச் செயலாளர் உதயசந்திரன் ஆகியோருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

தமிழர் நாகரிகம் குறைந்தது 2600 ஆண்டுகள் பழமையானது என்பது கீழடியில் நடத்தப்பட்ட  அகழாய்வின் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில்,  கி.மு. 6-ம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பதற்கான வரலாற்றுச் சான்றான, கீழடி ஆய்வறிக்கையை வெளியிட்டதற்கு பாராட்டுகள் .

இந்த அரிய தருணத்தில் கீழடி ஆய்வறிக்கையை வெளியிட்ட தொல்லியல்துறை அமைச்சர் பாண்டியராஜன், துறை முதன்மைச் செயலாளர் உதயசந்திரன் ஆகியோருக்கு பாராட்டுகளையும், வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய வராலற்றை, இனி தமிழகத்திலிருந்துதான் பார்க்க வேண்டும் என்பது மீண்டும் உறுதியாகியிருக்கிறது.தமிழர் நாகரிகம் ‘முற்பட்ட நாகரிகம்’ என்பதை உணர்த்தும் கீழடியில், அகழ்வாய்விடம் பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட வேண்டும்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்