கீழடி வெறும் ட்ரைலர் தான், மெயின் பிக்சர் இனிமேல்தான் வரப்போகிறது- அமைச்சர் பாண்டியராஜன்.!
சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் அகழாய்வை தொடங்கியது. இதுவரை நடந்த 6 கட்ட அகழாய்வுகள் நடைபெறவுள்ளது. இதில், முதுமக்கள் தாழிகள், பாசிகள், பவளம், வரிவடிவ பானை ஓடுகள், உள்ளிட்ட பல பொருட்கள் கண்டறியப்பட்டன.
இவற்றைக் கொண்டு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என பலர் கோரிக்கை வைத்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 12 கோடியே 21 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில், செய்தியாளர்களிடன் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், பட்டறைப் பெரும்புதூர் அகழாய்வில் ஆதிகாலமனிதன் தமிழன் என்பதை உறுதிப்படுத்தும் சான்றுகள் கிடைத்துள்ளன. இன்னும் 10 அல்லது 15 நாள்களில் பட்டறைப் பெரும்புதூர் அகழாய்வில் குறித்து தகவல் வெளியிடப்படும். கீழடி வெறும் ட்ரைலர் தான், மெயின் பிக்சர் இனிமேல்தான் வரப்போகிறது என தெரிவித்தார்.
பட்டறைப் பெரும்புதூர் 2 கட்டம் முடித்து விட்டோம் அதன் ஆய்வு அறிக்கை விரைவில் வெளியிடப்படும். மேலும், கடந்த 3 ஆண்டுகளில் தொல்லியல் துறையின் பொற்காலம் என மக்கள் போற்றி புகழ்கிறார்கள். அதற்கு பங்கம் வராமல் அடுத்த ஒரு மாதத்திற்கு எங்கள் பணி இருக்கும் என கூறினார்.