இந்தியாவுக்கான பிரதமராக இல்லாமல், வெளிநாட்டு பிரதமர் போல் நடந்து கொள்கிறார் : மு.க.ஸ்டாலின்
நான்கு தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் இதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருப்பரங்குன்றம் தொகுதியில், திமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி இந்தியாவுக்கான பிரதமராக இல்லாமல், வெளிநாட்டு பிரதமர் போல் நடந்து கொள்கிறார் என விமர்சித்துள்ளார். மேலும், எதிர்க்கட்சியாக என்ன செய்ய வேண்டுமோ, அதைவிட அதிகமாக திமுக மக்களுக்கு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.