“நம்ம சென்னை கோவிட் விரட்டும் திட்டம்” தொடக்கம்.!
சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 33 வார்டுகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர்.
சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 31 வார்டுகளில் கடந்த 3 நாட்களாக புதிய தொற்றுகள் எதுவும் கண்டறியபப்டவில்லை. இதைத்தவிர்த்து 136 வார்டுகளில் 10க்கும் குறைவான தொற்றுகளே கண்டறியப்பட்டுள்ளது. எனவே, சென்னையை பொறுவதவரை 167 வார்டுகளில் மிக குறைந்த அளவிலேயே தொற்று பரவல் இருந்து வருகிறது. எஞ்சிய 33 வார்டுகளில் மட்டுமே நோற்று தொற்று அதிக அளவில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, அந்த பகுதிகளை கண்டறிந்து, நோய் தொற்று அதிகம் உள்ள வார்டுகளில் கண்காணிப்பை மிகவும் தீவிரப்படுத்த சுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் 33 வார்டுகளில் நம்ம சென்னை கோவிட் விரட்டும் திட்டம் இன்று முதல் செய்லபடுத்தப்படுகிறது. சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 33 வார்டுகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர். காய்ச்சல் அறிகுறி உள்ளோரை மருத்துவமனை அழைத்து செல்லாமல் முகாம்கள் அமைத்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 33 வார்டுகளில் நடமாடும் வாகனங்கள் மூலம் எக்ஸ்ரே, ரத்த பரிசோதனை ஆகியவையும் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தொடக்க விழாவில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இவ்விழாவில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னையில் 33 வார்டுகளில் அறிகுறி இல்லாத மக்களுக்கும் எக்ஸ்ரே எடுக்கும் திட்டம் உள்ளது என்று கூறியுள்ளார். இதனிடையே, சென்னையில் நேற்று ஒரே நாளில் 552 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அங்கு பாதித்தோரின் எண்ணிக்கை 7672 ஆக அதிகரித்துள்ள நிலையில், 58 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.