திருச்சி மாவட்டத்தில் உள்ள பாலக்கரை பகுதியில் தாழ்த்தப்படட சமூதாயத்தை சேர்ந்தவர் சந்தியாகு.இவருக்கு ஹென்றிவினோத் என்ற மகனும் நிவேதா என்ற மகளும் உள்ளனர்.நிவேதா அதே பகுதியில் வசிக்கும் தெலுங்கு பிரமுனர் சமூகத்தை சேர்த்த சத்திய நாராயணன் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
மேலும் சத்திய நாராயணன் தனது ராஜேஸ்வரியுடன் ஒரே வீட்டில் வசித்துவந்துள்ளார்.இவரது தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.இந்நிலையில் நிவேதாவும் நாராயணனும் ஒரு வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதை அறிந்த நிவேதாவின் அண்ணன் பலமுறை இருவரையும் கண்டித்துள்ளார்.ஆனால் அவர்கள் அதை கேட்கவில்லை.இதனால் ஆத்திரம் அடைந்த ஹென்றி தனது நண்பர்களுடன் நாராயணனின் வீட்டிற்கு சென்று அவரை அழைத்து வந்து பெல்ஸ்கிரவுண்ட் பகுதியில் மது அருந்தியுள்ளனர்.
மேலும் போதை ஏறியதும் ஹென்றி தனது தங்கையை காதலிப்பதை நிறுத்திவிடுமாறு கூறியுள்ளார்.இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் ஹென்றி தனது கையில் இருந்த பீர் பாட்டிலை உடைத்து நாராயணனை குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
அப்போது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த சங்கரநாராயணனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே நாராயணன் உயிரிழந்துள்ளார்.இது குறித்து வழக்கு தொடுத்த காவல்துறையினர் ஹென்றியை கைது செய்துள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : பொங்கல் போட்டியில் இருந்து விடாமுயற்சி படம் வெளியேறியதில் இருந்து அடுத்ததாக பொங்கல் ரிலீஸ்க்கு நிறைய படங்கள் போட்டிக்கு வந்து…
சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றது. விழுப்புரம்-சென்னை சாலையிலுள்ள தனியாா்…
சென்னை : புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு மாவட்டங்களில்…
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் விரதம் இருந்து வரும் பக்தர்களின்…
விழுப்புரம் : விக்கிரவாண்டியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் எல்கேஜி பயின்று வந்த லியா லட்சுமி என்ற மூன்றரை வயது…
சிட்னி : இன்று பார்டர் கவாஸ்கர் தொடரின் 5வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் சிட்னி மைதானத்தில் தொடங்கி…