மாட்டிறைச்சி விற்பனை செய்யக்கூடாது என்று உத்தரவிட்ட வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் பணியிடமாற்றம்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டத்துக்கு உட்பட்ட கனங்குளம் பகுதியில் வட்டாட்சியர் தமிழ் செல்வம் அவர்கள், சனிக்கிழமை இரவு மாட்டிறைச்சி விற்பனை செய்வதாக புகார் வந்ததைத் தொடர்ந்து அங்கு ஆய்வு மேற்கொண்டார். அப்போது வேலுசாமி என்பவரின் கடைக்கு சென்று மாட்டிறைச்சி விற்பனை செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.
வட்டாட்சியரின் இந்த செயல் இணையத்தில் வைரலாகி வந்த நிலையில், வட்டாட்சியரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில், இது தொடர்பாக பல்வேறு கட்சியினரும், ஒன்றிணைந்த உணவு உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பு சார்பாகவும் போராட்டம் நடைபெற்றது. வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனுவும் அளித்துள்ளனர்.
இதனையடுத்து, பல்வேறு தரப்பினரும் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வந்த நிலையில், அவர் ஊத்துக்குளி தாலுகா அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அமேரிக்கா : தேர்தல் நேற்று மாலை தொடங்கிய நிலையில், இன்று காலை (இந்திய நேரப்படி) தேர்தல் நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து வாக்கு…
வாஷிங்க்டன் : அமெரிக்க தேர்தல் நேற்று மாலை தொடங்கிய நிலையில், இன்று காலை (இந்திய நேரப்படி) தேர்தல் நிறைவடைந்து வாக்கு…
அமெரிக்கா : அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி,…
சென்னை : நடைபெற்று வரும் அமெரிக்க தேர்தல் நிறைவடைந்து தற்போது வாக்கு எண்ணிக்கையும் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.…
சவுதி : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு என்பது இருந்து வந்தது. இந்த நிலையில்,…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…