அலங்கோலமான ஆட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது – வைகோ
- மஹிந்த ராஜபக்சேயை விட கொடூர முறையில் ஆட்சி செய்யக்கூடியவர் கோத்தபய என்று வைகோ தெரிவித்துள்ளார்.
- மேலும் கோலம் போட்டதற்கே கைது செய்து வழக்கு பதிவு செய்யும் அலங்கோலமான ஆட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், இலங்கையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் காலம் வரும். தமிழர்களின் நிலங்களில் இருந்து விரைவில் சிங்களவர்கள் வெளியேறும் காலம் வரும். மஹிந்த ராஜபக்சேயை விட கொடூர முறையில் ஆட்சி செய்யக்கூடியவர் கோத்தபய.
இரயில்வே துறையை தனியார் மயமாக்கப்படாது என சொல்லிவிட்டு நேற்று 150 இரயில்கள் தனியாருக்கு ஏலம் விடப்பட்டுள்ளது என குற்றம்சாட்டினார். 4.5 சதவீதம் பொருளாதாரம் வீழ்ச்சி அடைத்து உள்ளது.வெங்காயம் விலை உயர்ந்துவிட்டது.
வேலைவாய்ப்பின்மை என நாட்டின் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கடந்தமுறை பாஜக கூட்டணியில் இருந்ததாக தெரிவித்த அவர் மகேந்திர ராஜபக்ச சிறப்பு விருந்தினராக அழைத்த போதே பிரதமரை சந்தித்து கருப்பு கொடி காட்டுவேன் என எதிர்த்தேன்.
கட்ச தீவுகளில் மீன் பிடிக்கும் மீனவர்கள் கைது செய்வது, படகுகளை அபகரிப்பது போன்றவை தொடர்ந்து வருகிறது. மத்திய அரசு தமிழர்களுக்கு விரோதமாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது.கோலம் போட்டதற்கே கைது செய்து வழக்கு பதிவு செய்யும் அலங்கோலமான ஆட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது.ஆர்.எஸ்.எஸ்-ன் செயல் திட்டத்தை பாஜக செயல்படுத்த முயற்சிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.