அழகிய டிபி…. மயங்கி காதலித்து நேரில் சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Default Image

அழகிய டிபியை பார்த்து காதலித்து, நேரில் சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.

திருச்சியில் வசித்து வரக்கூடிய 30 வயதுடைய திருமணமானவர் தான் சிவா. இவருக்கு ஃபேஸ்புக் அதிகம் பயன்படுத்தும் பழக்கம் இருந்ததால் அனுஷ்யா எனும் பெண்ணுடன் அறிமுகமாகியுள்ளார். அதன்பின் அந்த பெண் டிபி வைத்திருக்கக்கூடிய புகைப்படம் அழகாக இருந்ததால் தனக்கு திருமணமானதை மறைத்து அந்த பெண்ணிடம் பேச ஆரம்பித்துள்ளார் சிவா. பின் நாளடைவில் காதலாக மாறி இவர்களது நட்பு மணிக்கணக்கில் தொலைபேசியில் பேச்சை வளர்த்துள்ளது. சிவாவிடம் இதை பயன்படுத்தி அந்த பெண்ணும் அடிக்கடி பணம் வாங்கி வந்துள்ளார், இதுவரை 3 லட்சம் வரைக்கும் சிவாவிடமிருந்து வாங்கியுள்ளார்.

இந்நிலையில் அந்தப் பெண்ணிற்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்பதற்காக நிறைய பரிசுப் பொருட்கள் மற்றும் தின்பண்டங்கள் வாங்கிக் கொண்டு திருவாரூரில் உள்ள அந்த பெண்ணுடைய வீட்டிற்கு சென்ற சிவாவுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அங்கு சென்று பார்த்தபோது அவருடன் பேசிய பெண் 40 வயதுடைய பெண் எனவும், அவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும், டிபி வைத்திருப்பது அந்த பெண்ணின் புகைப்படம் அல்ல, பக்கத்து வீட்டில் உள்ள பெண்ணின் புகைப்படம் என்பதும் தெரிந்து சிவா அதிர்ச்சி அடைந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தனது புகைப்படத்தை வைத்து அந்த பெண் பணம் கொள்ளை அடித்து ஒருவரை ஏமாற்றி இருப்பதை அறிந்த அந்த அழகிய பெண்மணியான பக்கத்து வீட்டுக்கார பெண் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் மேலும் அதிர்ச்சியன சம்பவங்களும் காத்திருந்து உள்ளது. ஏனென்றால் அந்தப் பெண்ணிற்கு அவரது கணவரும் தம்பியும் உடந்தையாக இருந்து தான் சிவாவிடம் பணம் பறித்துள்ளார்கள் என தெரியவந்துள்ளது. நால்வரையும் கைது செய்த போலீசார் வேறு யாரும் இதுபோல ஏமாற்றப்பட்டு உள்ளார்களா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்