விசில் அடிக்கணும்.. சவுண்ட் கொடுக்கணும் .. அவன் தான் அதிமுக காரன் – ராஜேந்திர பாலாஜி.!
- ஸ்ரீவில்லிபுத்தூரில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
- அப்போது பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி விசில் அடிக்கணும்.. சவுண்ட் கொடுக்கணும் .. அவன் தான் அதிமுக காரன் என கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஜெயலலிதாவிற்கு 72 வயது , எம்.ஜிஆருக்கு 103 வயது என்று சொன்னால் நம்ப முடிகிறதா..? நாம் பார்த்தது அடிமைப்பெண் எம்.ஜி.ஆர்தான். அவர் இறக்கும் வரை அப்படியே தான் இருந்தார்.
ஜெயலலிதா அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விதிவசத்தால் இறந்து விட்டார். தமிழகத்தில் சிஏஏவால் இஸ்லாமியர்கள் யாராவது பாதிக்கப்பட்டுள்ளார்களா..? என சட்டப்பேரவையில் முதலமைச்சர் கேட்டதற்கு ஸ்டாலின் பதில் கூறாமல் வெளிநடப்பு செய்கிறார்.
அதிமுகவினர் யாரும் காந்தி கையை பிடித்து வந்தவர்கள் கிடையாது. எம்.ஜி.ஆர் வழியில் வந்தவர்கள்.விசில் அடிக்கணும்.. சவுண்ட் கொடுக்கணும் அவன் தான் அதிமுக காரன் என்றும் கைகட்டி அமைதியாக காங்கிரஸ்காரர்களா என பேசினார்.