#BREAKING: ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையற்றது- மக்களவையில் திமுக வலியுறுத்தல்..!
தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்ற மக்களவையில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அரசுக்கே திருப்பி அனுப்பினார். இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நீட் விலக்கு மசோதா உச்சநீதிமன்ற உத்தரவிற்கு மாறாக உள்ளதாகவும், திருப்பி அனுப்புவதற்கான பிப்ரவரி 1-ம் தேதியே உரிய விளக்கத்துடன் சபாநாயகருக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டது. நீட் ரத்து மசோதாவை சட்டப்பேரவையில் மறுஆய்வு செய்ய ஆளுநர் மாளிகை அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில், நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கு கண்டனம் தெரிவித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு உள்ளனர். தமிழக உரிமையை பறிக்காதீர் என ஆளுநருக்கு எதிராக மக்களவையில் திமுக உள்ளிட்ட எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர். ஆளுநர் தனது முடிவை திரும்பப் பெற வேண்டும்.
ஐந்து மாதங்களாக முடிவெடுக்காமல் இருந்து விட்டு திருப்பி அனுப்புவது எந்த வகையில் நியாயம்..? என டி.ஆர் .பாலு கேள்வி எழுப்பினார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பி இருப்பது தவறான முன்னுதாரணம் திமுக தெரிவித்தது.
மேலும், ஆளுநரை திரும்ப பெற கோரியும், தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என தமிழ்நாடு எம்.பி.க்கள் முழக்கம். ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையற்றது என்று அண்ணா கூறியதை மேற்கோள் காட்டி திமுக வலியுறுத்தல். நீட் விலக்கு மசோதாவை திரும்ப அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூ. உள்ளிட்ட தமிழக எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.