அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்றுள்ளதால், தமிழகத்துக்கு கனமழை இன்றும் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடந்த சில தினங்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பருவமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் அங்கங்கே வெள்ள காடாக காட்சியகிறது தமிழகம்.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் மத்திய இந்திய பெருங்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுப்பெற்று மேற்கு – வடமேற்கு திசை நோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவுகளை ஒட்டியுள்ள பகுதியில் நிலைகொண்டுள்ள மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 16) முதல் வரும் நவம்பர் 21 வரையில் 6 நாள்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று முதல்…