கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் ரத்து… 50 சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!
கடற்கரை - தாம்பரம் புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதால், அவ்வழியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
சென்னை : தாம்பரத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (17ம் தேதி) சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டள்ளது.
அதற்கு பதிலாக சென்னை கடற்கரை – பல்லாவரம் இடையே சிறப்பு ரயில்கள் மாற்று அட்டவனைப்படி இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர் மற்றும் அரக்கோணம் ரயில்கள் வழக்கம் போல இயங்கும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இந்நிலையில், தாம்பரத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு கூடுதலாக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, தாம்பரத்திலிருந்து பல்லாவரம் பேருந்து நிலையத்திற்கு 10 பேருந்துகள், தி.நகர் பேருந்து நிலையத்திற்கு 20 பேருந்துகள் மற்றும் பிராட்வே பேருந்து நிலையத்திற்கு 20 பேருந்துகள் என மொத்தம் 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
மேலும் பயணிகளின் தேவைக்கேற்ப்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.