பிஇ மாணவர் சேர்க்கையில் வேதியியல் பாடம் கட்டாயமில்லை என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தீவிரமாக பரவிய கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமலேயே உள்ளது. கொரோனா பரவல் இன்னும் முடிவுக்கு வராததால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுமா என்ற சந்தேகம் இருந்த நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் சுழற்சி முறையில் நடைபெறும் என்று தமிழக அரசு நேற்று முன்தினம் அறிவித்தது.
எனினும்,பொறியியல் படிப்புக்கான சேர்க்கை கடந்த ஜூலை 26 ஆம் தேதியிலிருந்து ஆன்லைன் வழியாக நடைபெற்று வருகிறது. இதுவரை ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில்,பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு வேதியியல் பாடம் கட்டாயம் இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.கணிதம்,இயற்பியல் பாடங்களுடன் வேதியியல் பாட மதிப்பெண் கட்டாயமாக இருந்த நிலையில் தற்போது இந்த நடைமுறை மாற்றப்பட்டுள்ளது.
மேலும்,பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு நாளையுடன் முடியும் நிலையில் அதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.அதன்படி,10 மற்றும் 12ஆம் வகுப்பு கணிதம், இயற்பியல் பாடத்தின் மதிப்பெண்,ரேண்டம் எண்,பிறந்த தேதி அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. போட்டியில் விளையாட வீரர்கள் தயாராகி…
வாஷிங்டன் : நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து Crew-10 மிஷனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர்.கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க…
சென்னை : நேற்று (மார்ச் 14) 2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார்.…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…