ஆன்லைன் மூலம் நாளை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.
தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பொறியியல் படிப்பில் சேர கடந்த அண்டை விட இந்த ஆண்டு 20,000 அதிகம், கடந்த ஆண்டு தகுதியான விண்ணப்பம் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 406 இந்த வருடம் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 83 தகுதியான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
440 கல்லூரிகளில் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 870 மொத்த இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் தனியார் கல்லூரிகள், அரசு கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற உறுப்புக் கல்லூரிகள் அனைத்து கல்லூரிகளும் இந்த இடங்கள் உள்ளடங்கியுள்ளது. எனவே விண்ணப்பித்த அனைவருக்கும் இடம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
ஆன்லைன் மூலம் நாளை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கும். சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு விண்ணப்பங்கள் அதிக அளவில் வந்துள்ளன. பொறியியல் கல்லூரியில் சேர்ந்தவர்கள் பலர் மருத்துவத்திற்கு சென்று விடுகின்றனர். இதனால் பொறியியல் கல்லூரிகளில் காலியிடங்கள் நிரப்ப வேண்டும் என்பதற்காக ஐந்து முறை கவுன்சிலிங் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளேன்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு அமலுக்கு வரும். செப்டம்பர் 18-ம் தேதி சேர்க்கை ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என தெரிவித்தார்.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…