பி.இ செமஸ்டர் கட்டணம் – அவகாசத்தை நீட்டித்த அண்ணா பல்கலைக்கழகம்

Default Image

செமஸ்டர் கட்டணத்தை செலுத்துவதற்க்கான அவகாசத்தை வரும் 19-ஆம் தேதி வரை நீட்டித்தது அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் மாணவர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பட்டது. அதில், நடப்பு செமஸ்டர்  கட்டணத்தை வருகின்ற ஆகஸ்ட் 30-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டுமென்றும் கட்டணம் செலுத்த தவறிய மாணவர்கள் ரூ.200 முதல் ரூ.500 வரை அபராதம் செலுத்த வேண்டும்.

செப்டம்பர் 5-ஆம் தேதிக்குள் கட்டணம் செலுத்த தவறினால் அந்த மாணவர்கள் தங்களுடைய படிப்பை தொடர விரும்பவில்லை என்று கருதப்பட்டு மாணவர்கள் பெயர்கள் செப்டம்பர் 6-ஆம் தேதி பதிவேட்டில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அந்த அறிக்கையில் தெரிவித்தது.

இதனிடையே  செப்டம்பர் 5-ஆம் தேதிக்குள் செமஸ்டர் கட்டணங்களை செலுத்தாத மாணவர்களின் பெயர்கள் நீக்கப்படும் என்ற அண்ணா பல்கலைக்கழக உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் செமஸ்டர் கட்டணத்தை செலுத்துவதற்க்கான அவகாசத்தை வரும் 19-ஆம் தேதி வரை நீட்டித்தது அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.  செப்டம்பர் 5ஆம் தேதிக்கு பதிலாக செப்டம்பர் 19 ஆம் தேதி வரை கல்விக்கட்டணம் கட்டலாம் என்று தெரிவித்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்