அதீத கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட் தென்மாவட்ட மக்களுக்கு அரசு பல்வேறு நிவாரண உதவிகளை அளித்து வருவது போல பல்வேறு அரசியல் கட்சியினரும், தன்னார்வலர்களும் தங்களால் முடிந்த உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளித்து வருகின்றனர்.
தற்போது பெரும்பாலான பகுதிகளில் இயல்பு நிலை திரும்பினாலும், இன்னும் பல்வேறு இடங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் தேவைப்படுகிறது. அதனை அறிந்து அவர்களுக்கு உதவிகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. இன்று மக்கள் நீதி மய்யம் சார்பில் 12 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் வெள்ள நிவாரண பொருட்கள் தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
அதற்கான செய்தியாளர்கள் சந்திப்பில் மநீம தலைவர் கமல்ஹாசன், களத்தில் நேரடியாக உதவி செய்யும் தன்னார்வலர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அவர் கூறுகையில், சென்னையில் பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் உதவியது போல, தென் மாவட்ட மக்களுக்கும் பலர் தங்களால் முடிந்த உதவிகளை வழங்கியுள்ளனர். சேகரிக்கப்பட்ட நிவாரண பொருட்கள் இன்று தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்படும்.
உதவிக்கு தன்னார்வலர்கள் செல்லும் போது பாதுகாப்பாக திட்டமிடலுடன் செல்ல வேண்டியது அவசியம். அந்த திட்டமிடல் இல்லாததன் காரணமாகவே உதவிகள் திரட்ட இவ்வளவு தாமதமாகிறத. சரியான அதிகாரிகளிடம் முறையாக கலந்தாலோசித்து, திட்டமிட்டு உதவி தேவைப்படுவோருக்கு உதவ வேண்டும். உதவி செய்ய போகும் நபர்கள் ஆபத்தில் மாட்டிவிட கூடாது. பிறகு அவர்களை காப்பாற்ற இன்னொரு ஆள் வரும்படி செய்து விட கூடாது.
தற்போது தென்னகத்தில் நிலைமை சற்று சீராக உள்ளது. இருந்தும் உதவி தேவைப்படுவோருக்கு நாம் உதவ வேண்டும் என கூறினார். மேலும் அனைவருக்கும் ஆரோக்கியமான புத்தாண்டு வாழ்த்துக்கள் என கூறினார் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன்.
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…