கட்சிக்கும், தலைமைக்கும் விஸ்வசமாக இருங்கள் – முதலமைச்சர்

கட்சிக்கும், தலைமைக்கும் விஸ்வசமாக இருங்கள் என அதிமுகவினருக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராணிப்பேட்டை சோளிங்கர் அடுத்து பாண்டியநல்லூரில் அதிமுக இளைஞர், இளம்பெண் பாசறை மற்றும் தொழில்நுட்ப நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கட்சிக்கும், தலைமைக்கும் விஸ்வசமாக இருங்கள் என அதிமுகவினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்து சசிகலா நேற்று சென்னை திரும்பியுள்ள நிலையில், முதல்வர் பழனிசாமி இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், 3 மாதங்களில் திமுக என்ற கட்சியே இருக்காது. மூன்று மாதங்களில் திமுக ஆட்சிக்கு வரும் என்ற ஸ்டாலினின் பேச்சுக்கு முதலமைச்சர் பழனிசாமி பதில் தெரிவித்துள்ளார். முக ஸ்டாலின் வாயைத் திறந்தாலே பொய்யாக சொல்லிக்கொண்டு இருக்கிறார். நேற்று ஸ்டாலின் திமுக கூட்டத்தில் பேசும்போது, பழனிசாமி தினந்தோறும் பத்திரிகையில் செய்தி வெளியிட்டு வருகிறார், அவர் எதனை கிழித்தார் என்று கூறுகிறார். நாங்கள் கிழித்ததை தான் சொல்லிக்கொண்டு இருக்கிறோம் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் என்னனென்ன செய்தோமோ அதைத்தான் சொல்லிக்கொண்டு இருக்கிறோம். அதுக்கு ஏன் ஸ்டாலின் கோவமடைகிறார். நீங்கள் எதாவது செய்திருந்தால் சொல்லுங்கள், எதுமே செய்யவில்லை, அதன் சொல்ல முடியல என்று விமர்சனம் செய்துள்ளார். ஆனால், அதிமுக செய்ததை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறோம். திமுக அனைத்து இடங்களிலும் அவதூறாகத்தான் பேசி வருகிறது தவிர என்ன செய்தார்கள் என்று தெரிவிக்கவில்லை என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.