பொறியியல் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான செமஸ்டர் வகுப்புகள் ஆகஸ்ட் 18ஆம் தேதி தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தனது தீவிரவாத தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழகம் முழுவதும் கடந்த ஓராண்டிற்கும் மேலாகத் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்துள்ளது.
இந்த நிலையில், கொரோனா காலகட்டத்தில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டு வருகிறது. தற்போது பி.இ, பி.டேக் போன்ற பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பம் நடைபெற்று வரும் நிலையில் ஆகஸ்ட் 24-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொறியியல் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான செமஸ்டர் வகுப்புகள் ஆகஸ்ட் 18-ஆம் தேதி தொடங்கும் என்றும், டிசம்பர் 2-ம் தேதி செய்முறை தேர்வு நடைபெறும் என்றும், டிசம்பர் 13-ஆம் தேதி செமஸ்டர் தேர்வு தொடங்கும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
மேலும், இந்த தேர்வுகள் நிறைவடைந்த பின் அடுத்த ஆண்டுக்கான செமஸ்டர் வகுப்புகள் 2022, ஜனவரி -19-ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பொறியியல் வகுப்புகள் நடைபெற வேண்டும் என அண்ணா பலக்லைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே…
இந்நிலையில், வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து வானிலை…
சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…
சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…