தமிழகத்தில் அடுத்த 10 நாட்கள் கவனமாக இருக்க வேண்டும் – சுகாதாரத்துறை செயலர்
தமிழகத்தில் அடுத்த 10 நாட்கள் கவனமாக இருக்க வேண்டும்.
தமிழகத்தில் வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும், கொரோனா விதிமுறைகளை கைக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேனாம்பேட்டை மாநில தடுப்பூசி கிடங்கில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் பேசுகையில், கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பால் தமிழகத்தில் அடுத்த 10 நாட்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். 14 லட்சம் டோஸ் தடுப்பு மருந்துகள் கையிருப்பில் உள்ளன. இவை இன்னும் 3 நாட்களுக்கு போதுமானது என்று தெரிவித்துள்ளார்.