கவனமா இருங்க! மழைக் காலத்தில் இதையெல்லாம் செய்யக் கூடாது!
வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதால் வரும் நாட்களில் மழை பொலிவு அதிகமாக இருக்கும் என்பதால் நாம் கையாள வேண்டியவை பற்றி இதில் காணலாம்.
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தீவிரமடையத் தொடங்கியுள்ளது. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் வடமாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வரும் நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் பணியை தீவிரப்படுத்தி தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த மழை காலத்தில் நாம், பாதுக்காப்பாக நம்மை சுற்றி எப்படி கையாள வேண்டும் மற்றும் இந்த சமயத்தில் நாம் எதையெல்லாம் செய்யக் கூடாது என்பதை பற்றி கீழே பார்க்கலாம்.
மழை காலத்தில் செய்ய கூடாதவை :
- அரசாங்கம் தொடர்பாக வரும் செய்திகளைத் தாண்டி வெறும் எது மூலமாக வரும் எந்த ஒரு வதந்தியும் நம்பக் கூடாது.
- முடிந்த அளவிற்கு வெளியில் வராத வண்ணம் நம்மை பார்த்து கொள்ள வேண்டும். அத்யாவிஷய பொருட்களை வாங்குவதற்காக வெளியில் வருவதை தாண்டி தூரத்து பயணத்தை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
- சாலையில் தேங்கி கிடைக்கும் தண்ணீரில் தேவை இல்லாமல் நடந்து செல்வதை தவிர்த்து கொள்ள வேண்டும்.
- ஈரக்கையுடன் வீட்டில் இருக்கும் மின்சாரம் தொடர்பான எந்த ஒரு ஸ்விட்ச்சோ அல்லது வையரயோ தொடக்கூடாது.
- வீட்டிலோ அல்லது சாலையிலோ அறுந்து கிடக்கின்ற கம்பி அல்லது வையர் மீதோ மிதிக்காத வண்ணம் கவனமாய் இருக்க வேண்டும்.
- வீட்டில் உள்ள செல்ல பிராணிகளான நாய், பூனை போன்றவற்றை கட்டி வைக்க கூடாது.
- வீட்டில் குடிக்கும் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து குடிக்க வேண்டும், மேலும் பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை நன்கு கழுவிய பிறகு சமைத்துக் கொள்ள வேண்டும். தெருக்களில் விற்கும் உணவுகளை வாங்கி உண்ணக் கூடாது.
- உயரமான மற்றும் ஆபத்து அதிகம் உள்ளிட்ட இடங்களில் செல்ஃபி எடுப்பதை முற்றிலும் தவிர்த்து கொள்ள வேண்டும்.
- காய்ச்சல் போன்று அறிகுறி இருந்து 2 நாட்களுக்கும் மேல் சரியாகவில்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
- வீட்டில் கொசுத்தொல்லை இல்லாதவாறு, ஓரங்களில் தண்ணீர் தேங்காதவாறு சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
மழை காலத்தில் செய்ய வேண்டியவை :
- அரசு தொடர்பாக வரும் அதிகாரப்பூர்வ செய்திகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் அந்த ஒரு செய்தியை மட்டும் மற்றவருக்கு பகிர வேண்டும்.
- மொட்டை மாடியில் தேங்கும் குப்பைகளை முற்றிலும் அகற்ற வேண்டும்.
- வீடுகளில் கழிவு நீர் செல்லும் குழாயில் NOT RETURN VALVE என்ற குழாய்களைப் பொறுத்த வேண்டும்.
- வீட்டில் உள்ள கதவு மற்றும் ஜன்னல்கள் உள்ளிட்டவையை பூட்டி வைக்க வேண்டும்.
- அப்படி அத்யாவிஷய பொருட்கள் வாங்க சென்றாலும் கையில் குடை, அல்லது ரெயின் கோட் அணிந்து கொள்வது நல்லதாகும்.
- முடிந்த அளவிற்கு நமது மொபைல் போன்களை சார்ஜ் செய்துகொள்ள வேண்டும். அது நம்மை இக்கட்டான சூழ்நிலையிலும் காப்பாற்றும்.
- வீட்டில் இருக்கும் ஆவணங்கள், சான்றிதழ்கள் என முக்கியமான காகிதம் போன்றவற்றை மழை நீர் படத்தை அளவுக்கு பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்.
- கனமழை அதிகரிக்கத் தொடங்கினால் மின் இணைப்பை துண்டித்தது விட வேண்டும்.
- வீட்டில் சமயலறையில் உபயோகிக்கும் சிலிண்டர் இணைப்பை தேவை முடிந்தவுடன் off செய்துக் கொள்ள வேண்டும்.
- தாழ்வான இடத்தில் வசிக்கும் மக்கள் அனைவரும், மேடான பாதுகாப்பான இடத்தை நோக்கி செல்ல வேண்டும்.
- நம் வீட்டில் உள்ள சுவற்றை மழை பெய்யும் நேரத்தில் ஒரு முறை மின்சார கசிவு உள்ளதா என சோதனை செய்து கொள்ள வேண்டும். சிறிதளவு மின்கசிவு இருந்தால் கூட உடனடியாக அதிகாரிகளை வரவழைத்து அதற்கு உண்டான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.