பாராளுமன்றத்தில் 25 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி.
சென்னையில் இன்று “CHENNAI LIT FEST” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார், இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், 2024 நாடாளுமன்ற தேர்தல் நிலவரம் குறித்து இப்போது எதுவும் கூற முடியாது.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடனான சந்திப்பு சாதாரணமானது தான், அரசியல் குறித்து பேசவில்லை. மேலும், தென் மாவட்டங்கள், கொங்கு மாவட்டங்களில் பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது. பாராளுமன்றத்தில் 25 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் அளவிற்கு நாங்கள் தயாராக வேண்டும்.
20 ஆண்டுகள் பின் பாஜக வளர்ச்சி பற்றி சிந்தித்தால் இப்போது செல்லும் பாதை சரியானதாக இல்லை என தனது அரசியல் குறித்து காரசாரமாக பேட்டி கொடுத்துள்ளார்.
ஆனால் இதற்கு முன்னர், இன்று செய்தியளர்களிடம் பேசிய இணையமைச்சர் எல்.முருகன், அதிமுக – பாஜக கூட்டணி வலுவாக உள்ளது. கூட்டணி குறித்து நிர்வாகிகள் மத்தியில் அண்ணாமலை பேசியதில் எந்த சர்ச்சையும் இல்லை. தமிழகத்தில் 9 தொகுதிகளை அடையாளம் கண்டு பாரளுமன்ற தேர்தலில் வெற்றி பெற திட்டமிட்டுள்ளோம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…