பார் கவுன்சில் தேர்தலைக் கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழு!
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வெளியிட்டுள்ள அறிக்கையில் , தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலைக் கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழுவை அமைப்பது குறித்து அகில இந்திய பார்கவுன்சிலிடம் கருத்துக் கேட்டு தெரிவிக்க உத்தரவிட்டுள்ளது.
பார்கவுன்சில் தேர்தலில் முறைகேட்டைத் தடுக்கக் கோரி பாஸ்கர் மதுரம் என்பவர் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் கிருபாகரன், தாரணி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் விஜய் நாராயணன், தேர்தலில் வாக்குக்கு 30 ஆயிரம் ரூபாய், வெளிநாடு சுற்றுலா, இருசக்கர வாகனம், உள்ளிட்டவை வழங்கப்படுவதாக புகார் எழுவதைச் சுட்டிக்காட்டினார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், வழக்கறிஞர் தொழிலின் மாண்பை தற்போது காப்பாற்றாவிட்டால் நிலைமை இதைவிட மோசமாகி விடும் எனக் கூறினர். பார்கவுன்சிலில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது, ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழு அமைப்பது குறித்து அகில இந்திய பார்கவுன்சிலிடம் கேட்டு தெரிவிக்க தமிழ்நாடு பார்கவுன்சிலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.